இன்று எங்கே செல்லலாம்?
உஷா இந்த ஏழு நாள்களுக்கும் எங்கே செல்லப் போகிறாள்?
வாருங்கள், தெரிந்து கொள்ளலாம்!
சரியா? தவறா?
அடுத்து வரும் வாக்கியங்கள் சரியா தவறா என்று கண்டுபிடியுங்கள்.
இந்த இடத்தின் பெயர் என்ன?
பின்வரும் இடங்களின் படங்களைச் சரியான பெயர்கொண்ட பலகைகளுடன் இணையுங்கள்.
இது எந்த இடம்?
உஷா சென்ற சில இடங்களின் படங்களும் கீழே மறைந்து உள்ளன.
ஒரே மாதிரியான இடத்தைக் கொண்ட அட்டைகளை இணைத்திடுங்கள்.
ஒரே மாதிரியான இடத்தைக் கொண்ட அட்டை கிடைக்கவில்லை என்றால், மீண்டும் இன்னோர் அட்டையைத் தேர்ந்தெடுங்கள்.
இந்த நாள் எந்த நாள்?
கீழே உள்ள பெட்டிகளில் வாரத்தில் வரும் ஏழு நாள்களின் பெயர்களையும் காணலாம். அவற்றைச் சரியாக வரிசைப்படுத்துங்கள். வரிசை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடங்க வேண்டும்.
கலந்துரையாடல் நேரம்
பிள்ளைகளின் ஆர்வத்தையும் மொழி வளத்தையும் வளர்க்க வேண்டும் என்றால் காணொளியைப் பார்த்தவுடன் நின்றுவிடாமல், கதையைப் பற்றி கலந்துரையாடுவது நல்லது. அவர்கள் தமிழில் உரையாட இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
கீழ்வரும் கேள்விகளைக் கேட்டு ஆனந்தமாகக் கலந்துரையாடுங்கள்.

- வாரத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த நாள் எது? ஏன் என்று உங்களால் கூற முடியுமா? இந்த நாளில் நீங்கள் பொதுவாக என்ன செய்வீர்கள்?
What is your favourite day of the week? Can you share why this is your favourite day? What do you normally do on this day? - நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சென்ற ஒரு சுற்றுல்லா பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் எங்கே சென்றீர்கள்? எந்த நாளில் சென்றீர்கள்? அங்கு என்ன பார்த்தீர்கள்?
Share a memorable trip with your family and friends. Where did you go? When did you go there? What did you see there? - உஷா சென்ற இடங்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? உங்களுக்கு அந்த இடங்கள் பிடித்திருந்ததா? உங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசலாமே!
Have you been to any of these places Usha has gone to? Did you like it there? Do share your experience in these places with us!
ஆதரவு
