உஷாவுக்கு மிகவும் பசிக்கிறது. அவள் எந்த உணவு வகையைச் சாப்பிடப் போகிறாள்?
வாருங்கள், தெரிந்து கொள்ளலாம்!
இது எந்த உணவு?
உஷா காண்பித்த உணவுகள் சிலவற்றின் படங்கள் கீழே மறைந்து உள்ளன. ஒரே மாதிரியான உணவைக் காட்டும் அட்டைகளை இணைத்திடுங்கள்.
ஒரே மாதிரியான உணவைக் காட்டும் அட்டை கிடைக்கவில்லை என்றால், மீண்டும் இன்னோர் அட்டையைத் தேர்ந்தெடுங்கள்.
இந்த உணவின் பெயர் என்ன?
பின்வரும் உணவு வகைகளின் படங்களைச் சரியான பெயர்கொண்ட பலகைகளுடன் இணையுங்கள்.
இனிப்பான உணவுகள் எவை?
பின்வரும் காட்சியில் காணப்படும் இனிப்பான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
சரியான விடை என்ன?
அடுத்து வரும் கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
கலந்துரையாடல் நேரம்
பிள்ளைகளின் ஆர்வத்தையும் மொழி வளத்தையும் வளர்க்க வேண்டும் என்றால் கதையைப் பார்த்தவுடன் நிறுத்திவிடாமல் அதைப் பற்றிக் கலந்துரையாடுவது நல்லது. அவர்கள் தமிழில் உரையாட இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
கீழ்வரும் கேள்விகளைக் கேட்டு ஆனந்தமாகக் கலந்துரையாடுங்கள்.
புதிய உணவு வகைகளை ஒரு திறந்த மனத்துடன் சாப்பிட வேண்டும். ஏன் இது முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எந்த உணவினை நீங்கள் சாப்பிட்டுப் பார்ப்பீர்கள் என்று கூறுங்கள். Share the importance of trying out new dishes with an open mind. Why do you think this is important? Which food item do you think you will try out soon?
உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகை என்ன? ஏன் இந்த உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை விளக்கிக் கூறுங்கள். இதை வீட்டில் சாப்பிடுவீர்களா அல்லது உணவகத்தில் சாப்பிடுவீர்களா? What is your favourite meal? Why do you like this so much? Do you eat this at home or a restaurant?
“அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”. இதன் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதை நாம் ஏன் சாப்பிடும் போது நினைவில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? What does the proverb “அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” mean? And why is it important to remember this when we eat?